×

தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளது: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல்

சென்னை: தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரித்து வருகிறது. அதை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்கும் என்றும், வெயில் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்றும், வியாழக்கிழமை முதல் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டை மீண்டும் வெப்ப அலை தாக்க உள்ளது: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Pradeep Jan ,India ,Pradeep John ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்